தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டம் தொடர்பான கருத்தரங்கு


(லியோன்)

தேவை நாடும் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டம் தொடர்பாக பணியாற்றுகின்ற பயிலுனர்களுக்கான ( பரா லீகல் ) கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது


தேவை நாடும் மகளிர் அமைப்பானது குடும்பங்களில் அல்லது இல்லங்களில் பெண்கள் .சிறுவர்களுக்கெதிராக இடம் பெறும் சகல வன்முறைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி செயற்படும் ஒரு அமைப்பாகும் இதன் பின்னணியில் 1987 ஆம் ஆண்டில் ஒரு சில பெண்கள் அடங்கிய குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது .தற்போது நாடளாவிய ரீதியில் ஆறு கிளைகளை கொண்டு இயங்கி வருகின்றது .

இந்த அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது உளவளத்துணை ,குடும்ப உளவளத்துணை , திருமண ஆலோசனை வழிகாட்டல் , கல்விசார் உளவளத்துணை , இழப்பீட்டுக்குப் பிற்பட்ட உளவளத்துணை , மற்றும் உளவளத்துணையாளர்கள் , சட்டத்தரணிகள் ,சமூக நல சேவகிகள் ,உதவி நாட்களின் தேவைக்கேற்றவாறு சேவைகளை வழங்கி வருகின்றனர் .

இதன் கீழ் யு என் டி பி அனுசரணையில்  தேவை நாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் பாலசிங்கம் சங்கீதா தலைமையில்  சமூக வலைத்தலங்களினால் ஏற்படுகின்ற வன்முறைகளும் சட்ட தீர்வுகளும் ,

குடும்ப வன்முறை சட்டங்கள் தாபரிப்பு மற்றும் பராமரிப்பு சட்டங்கள் ,

இணைய குற்றங்கள் தொடர்பான கருத்துரைகளும் சட்ட தீர்வுகளும் தொடர்பாக சட்டம் தொடர்பாக பணியாற்றுகின்ற பயிலுனர்களுக்கான
கருத்தரங்கு மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இதில் வளவாளர்களாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எ அசீஸ் மற்றும் தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி கே .யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .

நடைபெற்ற கருத்தரங்கில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் , பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்