இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வினை கண்டறிதல் , இரண்டாம் நிலைக் கல்விச்சேவை தொடர்பான கலந்துரையாடல்

இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வினை கண்டறிதல் , இரண்டாம் நிலைக் கல்விச்சேவை வழங்கல் தொடர்பான  மதிப்பீடு ஆய்வு அறிக்கை கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றது .
 2015  டிசம்பர் மதம் முதல் 2019  ஏப்பரல் மாதம்  வரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் எக்டெட் நிறுவனம் இலங்கையில் மட்டக்களப்பு ,மொனராகலை ,.முல்லைத்தீவு ஆகிய மூன்று மாட்டங்களிலும் இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வினை கண்டறிதல் , இரண்டாம் நிலைக் கல்விச்சேவை வழங்கல் தொடர்பான     திட்டங்கள்  நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன . 

இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 மாதகால திட்டமாக  20 கிராம சேவை பிரிவுகளில் இலத்திரனியல் குடிமக்கள் அறிக்கை அட்டை ஆய்வினை கண்டறிதல் , இரண்டாம் நிலைக் கல்விச்சேவை வழங்கல் போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இல்லத்திரனியல் குடிமக்கள் மதிப்பீடு ஆய்வு அறிக்கை தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  சர்வோதயத்தில் நடைபெற்றது .

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அக்டெட் நிறுவனம் அனுசரணையில்  வறுமை ஆராச்சி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மதிப்பீடு ஆய்வு அறிக்கை கலந்துரையாடல் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட  செயலாளரும் , மாவட்ட அரசாங்க அதிபருமான  எம் .உதயகுமார் கலந்துகொண்டார் .

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான இல்லத்திரனியல் குடிமக்கள் மதிப்பீடு ஆய்வு அறிக்கை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விச்சேவை வழங்கல்   தொடர்பான அறிக்கை நூல் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது .

கலந்துரையாடல் நிகழ்வில் பிரதேச செயலாளர் , கல்வி திணைக்கள அதிகாரிகள் ,உள்ளூராட்சி மன்ற சபை உறுப்பினர்கள் ,,,மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள்  , பிரதேச சபைகள் ,ஆகியவற்றின் , உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .