செங்கலடியில் பல சரக்கு விற்பனை கடையில் தீ

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

செங்கலடி-பதுளை வீதியில் உள்ள பல சரக்கு விற்பனை நிலையத்திலேயே திடீர் என தீப்பற்றிய நிலையில் பிரதேசத்தில் இருந்தவர்களினால் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது பெருமளவான பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூடியிருந்த கடையிலேயே இந்த தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து தெரியவரவில்லையெனவும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.