இருதயபுரம் மேற்கு எவகிரீன் மைதானத்தினை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன


(லியோன்)

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் சிந்தனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையினால்  நகர அபிவிருத்திக்காக நிதிகள் ஒதுக்கீடுகள்  செய்யப்பட்டு  மாநகரை  முதன்மை படுத்தும் நடவடிக்கைகள் கீழ்  மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட  பகுதிகளில்  பல அபிவிருத்தி  புனர்நிர்மானம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன 
    

இதற்கு அமைய மட்டக்களப்பு இருதயபுரம் ஐந்தாம் வட்டாரம் உறுப்பினர் பூபாலராஜாவின்   வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாநகர முதல்வரின் பணிப்புரையின் கீழ்  மாநகர சபையின் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு  இருதயபுரம் மேற்கு எவகிரீன் விளையாட்டு மைதானத்தினை செப்பனிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

மட்டக்களப்பு மாநகர சபையின் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற செப்பனிடும் பணிகளை மாநகர முதல் தியாகராஜா சரவணபவன் ,பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் மற்றும் மாநகர உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்