பிரதான கால்வாயினை கொங்ரீட் கால்வாயாக நிர்மாணிப்பதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு டச்பார் வீதியில் அமைந்துள்ள பிரதான கால்வாயினை கொங்ரீட் கால்வாயாக நிர்மாணிக்கும்  வேலைக்கான அடிகள் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது .


மட்டக்களப்பு மாநகர சபையினால்  நகர அபிவிருத்திக்காக நிதிகள்  ஒதுக்கீடுகள்  செய்யப்பட்டு  மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட  பகுதிகளில்  பல அபிவிருத்தி  புனர்நிர்மானம் மற்றும் மாநகரை முதன்மை படுத்தும்  நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன 

இதற்கு அமைய மட்டக்களப்பு மாநகர முதல்வரின்  பணிப்புரைக்கு அமைவாக மாநகர சபையின் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எட்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  மட்டக்களப்பு  டச்பார் வீதியில் அமைந்துள்ள பிரதான மதகினையும் வாவியினையும் இணைக்கும் பிரதான கால்வாயினை கொங்ரீட் கால்வாயாக நிர்மாணிப்பதற்கான அடிகள் நட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது .

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் உட்பட  மாநகர சபை உறுப்பினர்கள் , மாநகர சபை உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர் ,பொதுமக்கள் என  பலர் கலந்துகொண்டனர்