உரிமைகளுக்காக குரல் கொடுத்த அருட்தந்தையர்களின் நினைவு நன்றி நவில் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து மக்களுக்காய் வாழ்ந்து மக்களுக்காய் தமது உயிரை தியாகம் செய்து உயிரை இழந்த மூன்று
அருட்தந்தையர்களின் நினைவு நன்றி நவில் விசேட திருப்பலியும் விதைக்கப்பட்ட மறைசாட்சிகளை வாயாரா வாழ்த்தும் ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் (30) மாலை நடைபெற்றது ,


அமெரிக்காவில் இருந்து  இலங்கையின் மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு பணியாற்றுவதற்காக வந்த இயேசு சபை துறவி அருட்தந்தை யூஜீன் ஹெபெயார்  மற்றும் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ , அருட்தந்தை செல்வராஜா சவரிமுத்து ஆகிய மூன்று குருக்களும் யுத்த காலத்தில் அப்பாவி இளைஞர் யுவதிகள் கொலை செய்யப்பட நேரத்தில் அகதி முகாம்களுக்குள் மக்கள் அடைப்பட்ட பயங்கரமான சூழ்நிலையில் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டிய இவர்களை சுட்டு கொல்லப்பட்டதுடன் , காணாமல் ஆக்கப்பட்டார்கள்

இவர்களின் ஆன்மா இளைப்பாற்றிக்கும் ,இவர்களுக்கான நன்றி நவில் ஒன்று கூடல் நிகழ்வாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் தலைமையில் நன்றி நவில் விசேட திருப்பலியுடனான ,ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது

இந்த  விசேட திருப்பலியுடனான ,ஒன்று கூடல் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி நோயல் இம்மானுவேல் ,விசேட அதிதிகளாக  ஒய்வு நிலை ஆயர் ஜோசெப் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை ,மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , மாநகர ஆணையாளர் என் , மனிவண்ணன் ,மற்றும் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரர்கள் , அருட்சகோதரிகள் , பொதுநிலையினர் , அருட்தந்தையர்களின் குடுமப் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்