துவிச்சக்கர வண்டிகளுக்கு இலவச டைனமோல் இணைப்பு


(லியோன்)

துவிச்சக்கர வண்டி பயணிகளின்  விபத்துக்களை  தடுக்கும் வகையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு இலவச டைனமோல் இணைப்புகள் வழங்கும்  நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன 
 .

இலங்கையில் இடம்பெறுகின்ற துவிச்சக்கர வண்டி பயணிகளின்  விபத்துக்களை  தடுப்பதற்கான நடவடிக்கையினை இலங்கை போக்குவரத்து பொலிஸ் திணைக்களத்துடன் டெமோ நிறுவனம் இணைந்து  முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன .

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள விபத்துக்களை  தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவு பொலிசாருடன் டெமோ நிறுவனம் இனைந்து இரவு நேர துவிச்சக்கர வண்டி பயணிகளின் நலன் கருதி துவிச்சக்கர வண்டிகளுக்கு இலவச  டைனமோல் இணைப்புகள் வழங்கும் நடவடிக்கையினை  முன்னெடுத்து வருகின்றனர் 

இதன் கீழ் மட்டக்களப்பு மட்டக்களப்பு  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே டி .சந்திரபாலவின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தயால் தீகா வதுற தலைமையில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பயணிக்கும் துவிச்சக்கர வண்டிகளுக்கான இலவச  டைனமோல் இணைப்புகள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டன