அமிர்தகழி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பாலஷ்தாபன கும்பாபிஷேகம்


(லியோன்)

 .
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட அமிர்தகழி கிராமத்தில்  அமைந்துள்ள சிறப்பு மிக்க ஆலயமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன்   ஆலயத்தின்  ஆலய பாலஷ்தாபன கும்பாபிஷேகம் விசேட அபிஷேக பூசைகள்  அமிர்தகழி மாமாங்கேஸ்வரர்  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ  சௌந்தராஜன் குருக்கள் தலைமையில்  நடைபெற்றது
 .

விநாயகர் வழிபாடுகளுடன் நடைபெற்ற விசேட யாக பூஜைகளை தொடர்ந்து ,பிரதான கும்பம் மற்றும் பரிபால கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாக அம்மனுக்கு  அபிசேகம் செய்யப்பட்டது..

இதனை தொடர்ந்து  விசேட தீபாரதனைகள் பூஜை வழிபாடுகள் நடைபெற்றது இந்த உற்சவத்தில் கிராம பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்









.