கல்லடித்தெரு திரௌபதையம்மன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு பாற்குட பவணி


 (லியோன்)

மட்டு- நகரில் சிறப்பு மிக்க மட்டக்களப்பு  புளியந்தீவு – கல்லடித்தெரு –பாஞ்சாலிபுரம்  அருள்மிகு  ஸ்ரீ  திரௌபதையம்மன் ஆலய 
வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு   மாபெரும் பாற்குட பவணி மட்டக்களப்பு  ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார்  ஆலயத்தில் இருந்து ரம்பமானது
.

பால்குட பவனியானது  ஆலயத்தில் நடைபெற்ற பூஜை தீபாரதனைகளை தொடர்ந்து மட்டக்களப்பு நகர் ஊடாக பிரதான வழியாக ஆலயத்தினை  வந்தடைந்தது , இதனை தொடர்ந்து அடியார்கள் கொண்டுவந்த  பால் மூலமூர்த்தியாகிய  அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து  விசேட பூஜை நடைபெற்று தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய    அம்மனுக்கு  அபிசேகம் செய்யப்பட்டது.

இந்த உற்சவ சடங்கு பெருவிழாவில்  பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்