கிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி - ஞா.ஸ்ரீநேசன்



(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின், மாவட்ட மட்டத்திலான விளையாட்டுப்போட்டி நேற்று (01.07.2018) வெபர் மைதானத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விளையாட்டு ராஜாங்க அமைச்சர் சிரியாணி விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்த்துகொண்டதோடு
பிரதி அமைச்சர்களான அலிசாகிர் மௌலானா, அமீர் அலி, மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவான், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செ.சண்முகராஜா ஆகியோரும் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வின்போது 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டம் இன்னும் அபிவிருத்தியில் பின்தங்கி இருப்பதையும் விளையாட்டுத்துறை போதுமானளவு அபிவிருத்தி செய்யப்படாமையினையும் விளையாட்டு ராஜாங்க அமைச்சருக்கு ஞா.ஸ்ரீநேசன்பாராளுமன்ற உறுப்பினர் தெளிவு படுத்தினார்.
இம்மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் மிக ஊக்கமுள்ள இளைஞர் யுவதிகள் உள்ளபோதிலும் போதுமான வசதி வாய்ப்புக்கள் வழங்கப் படாமையினால் அவர்களது திறமை மழுக்கப்படுவதகவும் தெரிவித்து போதுமான விளையாட்டு வசதிகள் வழங்கப்படுமானால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் சர்வதேசம் வரை செல்லும் திறமை படைத்தவர்கள் என்றும் கூறினார்.
மேலும் எதிர்வரும் காலங்களிலாவது மட்டக்களப்பு மாவடத்தின் விளையாட்டுத்துறை அப்பிவிருத்தி உதவுமாறு கேட்டுக் கொண்டமைக்கிணக்க கிராம மட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் சிரியாணி விஜயவிக்கிரம உறுதியளித்தார். இதன்படி பத்து கிராம மட்ட விளையாட்டு மைதானங்களை புரமைக்க கோரும் முன்மொழிவு அவரிடம் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.