போரதீவுப்பற்று பிரதேச சமுர்த்தி பயனாளிகளை மேம்படுது;துவதற்குரிய கௌரவ அமைச்சர் அவர்களின் கண்காணிப்பு விஜயம்

(படுவான் எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேச சமுர்த்தி பயனாளிகளை மேம்படுது;துவதற்குரிய கௌரவ அமைச்சர் அவர்களின் கண்காணிப்பு  நிகழ்வு (30) கலாச்சார மத்திய நிலையத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வின் போது பொதுமக்கள் சமுர்த்தி திட்டத்தினால் அதிகமான வாழ்வாதார திட்டங்கள் போரதீப்பற்று பிரதேசத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

வழங்கப்படுகின்ற வாழ்வாதாரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அப்பொருட்களை விற்பனை செய்வதற்குரிய சந்தை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றது அதனை ஏற்படத்தி தரப்பட வேண்டும் அதேபோன்று வங்கியினால் வழங்கப்படுகின்ற கடன்தொகையினை அதிகரிப்பதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில்; யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசம் போரதீவுப்பற்று பிரதேசம் இம்மக்கள் பல இன்ப துன்பங்களை அனுபவித்தவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட விதவைகள் இளம்குடும்பங்கள் உள்ளனர் இவர்களுக்கு சமுர்த்தி முத்திரை வழங்கப்படவில்லை. போன்ற விடயங்கள் மக்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் சிறுவர் தினபோட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் சமுர்த்தி பயனாளிகளுக்கு முற்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்போது சமுர்த்தி சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ.கரிஸன் கிராமிய பொருளாதார கடத்தொழில் நீரீயவள மீன்பிடி பிரதி அமைச்சர் எம.;எஸ்.எஸ் அமீர்அலி முன்னாள் பிரதியமைச்சரும் பட்டிருப்புத்தொகுதி ஐ.தே.க அமைப்பாளரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான எஸ்.கணேசமூர்த்தி சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சியானி அமரகோன் பிரதேசசபை உறுப்பினர் செல்வி.கொ.இந்துஜா சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் கே.உதயகுமார் தலைமையகமுகாமையாளர் திருமதி பீ.ஜீவகுமார் வங்கி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.