மட்டக்களப்பில் அதி நவீன உடல் வலுவூட்டல் நிலையம் திறப்பு

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அதிநவீன முறையிலான உடல் வலுவூட்டல் பயிற்சி நிலையம் மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் வன்னியாஸ் வீதியில் ஈஸ்ரன் பிற்னஸ் ஜிம் என்னும் பெயரில் இந்த நவீன உடல் வலுவூட்டல் நிலையம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

ஈஸ்ரன் பிற்னஸ் ஜிம் சென்றரின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கி.துரைராஜசிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.துரைரெட்னம் மற்றும் பிரதேசசபையின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள்,மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

ஆண்கள் பெண்களுக்கான தனித்தனியான நேரங்கள் ஒதுக்கப்பட்டு ஆண் பெண் பயிற்சியாளர்களினால் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அனைத்துவிதமான உடல் வலுவூட்டல்களையும் செய்யக்கூடிய நவீன இயந்திரங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் இந்த உடல் வலுவூட்டல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் குறைந்த கட்டணத்தில் இதன் சேவைகள் வழங்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இலங்கை உடல் வலுவூட்டல் நிலையத்தினால் அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த நிலையத்தின் மூலம் எதிர்காலத்தில் தேசிய,சர்வதேச உடற்கட்டு போட்டிகளில் இளைஞர் யுவதிகள் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பமும் இதன் மூலம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.