“கூத்து” ஓவிய கண்காட்சி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கட்புலத்துறை விரிவுரையாளர் ஹோகுலரமணனின் கூத்து ஓவியக்கண்காட்சி இன்று நடைபெற்றது.

விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கலைக்கூடத்தில் இந்த கண்காட்சி இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

தமிழர்களின் கலைகளுக்குள் அலங்காரக்கலையின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் கூத்துக்கலையின் பரிமாணத்தினை பல்வேறு வகையில் இந்த கண்காட்சியின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி திறப்பு விழாவில் பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி கே.பிரேம்குமார், விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறை விரிவுரையாளர் திருமதி பிரியதர்சினி உட்பட மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியை எதிர்வரும் முதலாம் திகதிவரையில் காலை முதல் மாலை வரை பார்வையிடமுடியும்.