தாந்தாமலை ஶ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்.

கிழக்கிலங்கையில்சின்னக்கதிர்காமம் என
அழைக்கப்படும் மட்டக்களப்பு படுவான்கரை
 பிரதேசத்தில் பல்நெடுங்காலமாக
இயற்கை வளம் செழிக்கும்  தாந்தாமலை ஶ்ரீ முருகப்பெருமான் ஆலயத்தின்  வருடாந்த
மகோற்சவ திருவிழா எதிர்வரும் 07/07/2018,சனிக்கிழமை திருக்கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 28/07/2018
சனிக்கிழமை காலை தீர்தோற்சவத்துடன்
இனிதே நிறைவு பெறும்.

.இதன் படி தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் இரவு திருவிழாக்கள் அலங்கார சிறப்பு
ஆராதனைகளுடன் இடம்பெறவுள்ளது.
அதன்படி 7ம் திகதி இரவு கற்சேனை,தீவுக்குடியிருப்பு,கிரான்குளம் கிராம மக்கள் திருவிழா,  8ம் திகதி ஆரையம்பதி தொடக்கம் மட்டக்கள்பு மக்கள் திருவிழா, 9ம் திகதி மண்முனை
தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் திருவிழா.10ம் திகதி பட்டிப்பளை கிராம மக்கள் திருவிழா. 11ம் திகதி கடுக்காமுனை கிராம மக்கள் திருவிழா,
12ம் திகதி மகிழூர்,மகிழூர்முனை,கண்ணகிபுரம் மக்கள்திருவிழா,13ம் திகதி புதுமண்டபத்தடி, கரையாக்கன்தீவு,நடராசானந்தபுரம்,பாவற்கொடிச்சேனை மக்கள் திருவிழா,14ம் திகதி தாந்தாமலை,கச்சக்கொடிசுவாமிமலை,பன்சேனை,சில்லிக்கொடியாறு மக்கள் திருவிழா,
15ம் திகதி இலுப்படிச்சேனை,கொத்தியாபுலை மக்கள். திருவிழா,16ம் திகதி புதுக்குடியிருப்பு
கிராம மக்கள் திருவிழா,17ம் திகதி அம்பிளாந்துறை கிராம மக்கள் திருவிழா,18ம் திகதி குருக்கள்மடம்,செட்டிபாளையம்,தேற்றாத்தீவு,மாங்காடு,கழுதாவளை,களுவாஞ்சிகுடி மக்கள்
திருவிழா,19,ம் திகதி நாற்பதுவட்டை மக்கள் திருவிழா,20ம் திகதி
பனிச்சையடிமுன்மாரி,மாவடிமுன்மாரி,திக்கோடை,39ம்,49ம் கிராம மக்கள் திருவிழா,
21ம் திகதி எருவில் கிராமமக்கள் திருவிழா,22ம் திகதி மகிழடித்தீவு, தாழங்குடா,படையாண்டவெளி,பண்டாரியாவெளி மக்கள் திருவிழா,23ம் திகதி அரசடித்தீவு
கிராம மக்கள் திருவிழா, 24ம் திகதி முதலைக்குடா கிராம மக்கள் திருவிழா, 25ம்திகதி
கன்னன்குடா,மண்டபத்தடி,குறிஞ்சாமுனை,காயன்காடு,புளியடிமடு,பரித்திச்சேனை
மக்களின் திருவிழா,26ம் திகதி கொக்கட்டிச்சோலை கிராம மக்கள் திருவிழா,27ம் திகதி முனைக்காடு கிராம மக்கள் திருவிழா. 28ம் திகதி அதிகாலை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.