மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மாமாங்கம் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய அடியார்கள் புடைசூழ நடைபெற்ற தீமிதிப்பு உற்சவம்


(லியோன்)


 மட்டக்களப்பு  மாமாங்கம் ஸ்ரீ சிவமுத்து  மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்புஉற்சவம்  அடியார்கள் புடைசூழ மிக பக்திபூர்வமாக       நடைபெற்றது.


மட்டக்களப்பு  நகரில் சிறப்பு மிக்க அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும்  மாமாங்கம் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆலய பிரதம பூசகர்  சு . சுமனபால தலைமையில்  கடந்த 23  ஆம் திகதி   சனிக்கிழமை  மாலை திருக்கதவு  திறத்தல் உற்சவத்துடன்  ஆரம்பமாகி    தீமிதிப்பு வைபவம் மிக பக்திபூர்வமாக இடம்பெற்றது .

இந்த தீமிதிப்பு வைபவத்தில்  மட்டக்களப்பு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்த  அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்து தமது வழிபாடுகளையும் நேர்கடன்களையும் நிவர்த்தி செய்தனர் .

ஆலய வருடாந்த உற்சவம்   வேள்வியுடன் தொடர்ந்து திருக்கும்பம் சொரிதலுடன் ஆலய வருடாந்த உற்சவம்  நிறைவு பெற்றது