காவியா பெண்கள் சுயதொழில் பயனாளிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


 (லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 4000 ஆயிரம்  அங்கத்துவ பெண்களையும் 2000  ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை கொண்ட காவியா பெண்கள் சுயதொழில் நிறுவகத்தின் ஐந்தாண்டு நிறைவு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வும் காவியா பெண்கள் சுயதொழில் நிறுவகத்தின் ஊடாக பயன்பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்ட பயனாளிகளையும்  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்  மட்டக்களப்பு கூட்டுறவு சங்க மண்டபத்தில்  நடைபெற்றது


காவியா பெண்கள் சுயதொழில் நிறுவகத்தின்  நிறைவேற்று பணிப்பாளர் திருமதி .யோகமலர் அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் கலந்துகொண்டு சுயதொழில் ஊடாக பயன்பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்ட பயனாளிகளுக்கு விருதுகள்  வழங்கி  கௌரவித்தார் .

மட்டக்களப்பு மாவட்டத்தை பொலித்தீன் அற்ற பிரதேசமாக சூழல் நேயமிக்க உற்பத்திகளை மேம்படுத்துவதினையும் ,உணவு  பொதியிடலில் இயற்கையிலான பொருட்களை பயன்படுத்தி பங்களிப்பு செய்கின்ற உற்பத்தியாளர்களையும்   பாராட்டி சான்றிதழ்களையும்   வழங்கி வைத்தார்   

இந்த கௌரவிப்பு நிகழ்வில் அதிதிகளாக ஒய்வு நிலை கல்விப்பானிப்பாளர் திருமதி .சுபா சக்கரவர்த்தி ,ஐ எல் ஒ  தேசிய நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் ஆர் சிவபிரகாசம் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .நெடுச்செழியன் , வி .எபெக்ட் நாட்டுக்கான பணிப்பாளர் திருமதி ,சுபாஷி திசாநாயக  மற்றும் இந்நிகழ்வில் காவியா பெண்கள் சுயதொழில் நிறுவகத்தின் உத்தியோகத்தர்கள் , பயனாளிகள்  என பலர் கலந்துகொண்டனர்