44வது தேசிய கடற்கரை கபடி விளையாட்டு விழா


 (லியோன்)

விளையாட்டுத்துறை மாகான சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடாத்தும் 44வது தேசிய  விளையாட்டு விழா மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்  (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது


விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச் எம் பி பி ஹேரத் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஜூன் 1ஆம்  2 ஆம் 3 ஆம் ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகின்ற தேசிய கபடி விளையட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள்  நடைபெற்றது

ஆரம்பமான தேசிய கபடி விளையாட்டு போட்டிகளில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் கபடி வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்

 நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்  கலந்துகொண்டார் .நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் விளையாட்டு ஏற்பாட்டு குழுவினால்  வரவேற்பு அழைக்கப்பட்டது .இதனை தொடர்ந்து  மாகான ,,விளையாட்டு கொடிகள் ஏற்றப்பட்டு போட்டிகள் ஆரம்பமானது .

நிகழ்வில் அதிதிகளாக  இலங்கை கபடி சம்மேளன செயலாளர்  அனுர பத்திரன ,கிழக்கு மாகான விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் என் மணிவண்ணன் ,பிரதி முதல்வர் ,கந்தசாமி சத்தியசீலன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் ,மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன் ,காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி  ஆராச்சி ,மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் , விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்

நடடைபெருகின்ற இந்த கபடி போட்டியின் இறுதி  நிகழ்வுகள்  3 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது