மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் உள்ள வாவியில் இருந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் சுமார் 30 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் எனவும் கறுப்பு டெனிம் நீளக்காற்சட்டை மற்றும் நீல அரைக்காய் ரீசேட் அணிந்திருந்ததாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் வாவிப்பகுதியில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகவும் அடையாளம் காண்பதற்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.