இந்திய வீட்டுத்திட்டத்தின் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு


(லியோன்)

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள்  மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு  மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் ஈச்சந்தீவு கிராமத்தில்  நடைபெற்றது


இந்திய அரசினால் பல அபிவிருத்தி திட்டங்கள்  இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்;  இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் ஈச்சந்தீவு கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் நிர்மாணிக்கப்பட்டுள்ள 50 வீடுகள்  மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு  மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் நடைபெற்றது  

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் பதில் தூதுவர் அறின்டோம் பட்ஜி கலந்துகொண்டு இந்த வீடுகளை மக்களுக்கு கையளித்தார் .

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் துதுக்குழு பிரதிநிதிகள் , மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .நெடுஞ்செழியன் ,, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர்