புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


(லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருத்தலமான புளியந்தீவு புனித அந்தோனியார்  திருத்தலத்தின்  வருடாந்த திருவிழா மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை எ .தேவதாசன்   தலைமையில் கொடியேற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது ..


இடம்பெற்ற கொடியேற்ற நிகழ்வில் மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தல பங்கு தந்தை அருட்பணி  நிக்சன்  மற்றும் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , பங்கு மக்கள் கலந்துகொண்டனர்
ஆரம்பமான  திருத்தல திருவிழா  எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை  காலை  இடம்பெறவுள்ள கூட்டுத்திருப்பலியுடன் நிறைவுபெறவுள்ளது

இந்த விசேட கூட்டுத்  திருப்பலியினை   மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் ஒப்புகொடுக்கப்பட்டவுள்ளது

திருத்தலத்தின்  திருவிழா நவநாள் காலங்களில் விசேட திருப்பலிகள் இடம்பெற்று  எதிர்வரும் 12ஆம் திகதி  செவ்வாய்கிழமை  மாலை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் விசேட நற்கருணை வழிபாடுகளுடன் திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்  

கொடியேற்றத்துடன் ஆரம்பமான அந்தோனியார் திருத்தலத்தின்  வருடாந்த திருவிழாவின் முதல் நவநாள் திருப்பலியினை “மனித வாழ்வும் மனித மான்புமே சமூக அக்கறையின் அடிப்படை”  எனும் தலைப்பில் தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்கு   தந்தை ரமேஷ் கிறிஸ்டி தலைமையில் பங்கு மக்கள் இணைந்து  ஒப்புகொடுக்கப்பட்டது