ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிசேகம்

கிழக்கிலங்கையின் மிகவும் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம் நாளை திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு அடியார்கள் பால்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை முதல் நடைபெற்றுவருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் நீண்ட வரலாற்றினையும் சக்திவாய்ந்த ஆலயம் என்ற பிரபல்யத்தினையும் கொண்டதாக ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயம் காணப்படுகின்றது.

மிகவும் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் பால்காப்பு சாத்தும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டுவருகின்றனர்.

ஆலயத்தின் கும்பாபிசேகத்தினை சிறப்பிக்கும் வகையில் ஏறாவூர் காளி புகழ்மாலை இறுவெட்டும் ஆலயத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.