பொதுமக்களின் நலன் கருதி பொலிசாரின் சமூக பணி


(லியோன்)

பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின்  நலன் கருதி  மட்டக்களப்பு  கல்முனை  பிரதான வீதியின் தாளம்குடா பகுதியில்  உள்ள  பிரதான பேருந்து  தரிப்பிடத்திற்கு வர்ணபூச்சி பூசும் பணியினை பொலிசார் இன்று மேற்கொண்டனர் 


பொலிஸ்மா  அதிபரின்  சிந்தனைக்கு அமைவாக    பொலிஸ் திணைக்களம் நாடளாவிய ரீதியில் பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது

இதன்கீழ் மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் தலைமையக  பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஏற்பாட்டில் தாளங்குடா கிராம இளைஞர்கள் இணைந்து  பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின்  நலன் கருதி  மட்டக்களப்பு –  கல்முனை  பிரதான வீதியின்  தாளங்குடா பகுதியில் கல்வியல் கல்லூரிக்கும் முன்னாள் உள்ள  பிரதான பேருந்து  தரிப்பிடத்திற்கு வர்ணபூச்சி பூசும் பணியினை  இன்று முன்னெடுத்துள்ளனர்

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராச்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி டி . மகேஸ்வரன் ,காந்தான்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், தாளங்குடா கிராம இளைஞர்கள் கலந்துகொண்டனர்.