அடியார்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்ற கொத்துக்குளம் முத்து மாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  வரலாற்று சிறப்புமிக்க அம்மன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு  திருப்பெருந்துறை கொத்துக்குளம்  ஸ்ரீ  முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின்  தேர்த்திருவிழா அடியார்கள் புடை சூழ  இன்று கோலாகலமாக  நடைபெற்றது
.

ஆலய பிரதம  குரு சிவஸ்ரீ  நாராயண சன்முகநாதக் குருக்கள் தலைமையில் இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி  விசேட    அபிசேகம் பூஜைகளுடன்  பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது 
  .
இதனை தொடர்ந்து தம்ப பூஜை ,வசந்த மண்டப பூஜை நடைபெற்று அம்பாளுக்கு அபிசேம், தீபாராதனைகள்  நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட அம்பாளின் ரதம் உள்வீதி  வலம்வருதல் சிறப்பாக நடைபெற்றது

இதனை தொடர்ந்து ஆலய மஹோற்சவத்தின்  தேர்த்திருவிழா அடியார்கள் புடை சூழ வேத ,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது .
நடைபெற்ற  ஆலய மஹோற்சவம் தேர்த்திருவிழா   உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர் .