விஸ்வருப ஆஞ்சநேயர் ஆலய கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு


(லியோன்)
  

மட்டக்களப்பு நுழைவாயில் பிள்ளையாரடி அருள்மிகு ஸ்ரீ விஸ்வருப ஆஞ்சநேயர் திருக்கோவில் பஞ்சகுண்ட  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் பெருஞ்சாந்திப்  பெருவிழா விஞ்ஞாபன நிகழ்வுகள் 25 ஆம் திகதி  திங்கள்கிழமை  ஆரம்பமாகி எதிர் வரும் 28 ஆம் திகதி  வியாழக்கிழமை  நடைபெறவுள்ள  கும்பாபிஷேக  விஞ்ஞாபன நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது 


கிழக்கிலங்கையின்  சிறப்புமிக்க  ஆலயமாக  கருதப்படும் மட்டக்களப்பு பிள்ளையாரடி ஸ்ரீ விஸ்வருப ஆஞ்சநேயர் ஆலய பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்திப்  பெருவிழா விஞ்ஞாபன  நிகழ்வை முன்னிட்டு இன்று ,நாளையும்   இரண்டு நாட்கள்  எண்ணெய்   காப்பு  சாத்தும்  நிகழ்வுகள்  இடம்பெற்று வருகின்றன

ஆலய பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன  நிகழ்வுகள்   எதிர் வரும் 28 ஆம் திகதி  வியாழக்கிழமை காலை சுபவேளையில்  மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன  நிகழ்வுகள் பிரதிஷ்ட பிரதம குரு  சபரிமலை குருசாமி சிவாகம கிரியாபூஷனம்  சிவாச்சாரியார்  திலகம்   சிவஞான பாஸ்கரன்  குருக்கள்  தலைமையில்  நடைபெறவுள்ளது  .