ராணமடு பாலர் பாடசாலைமாணவர்களுக்கு ஆரோக்கியமான ஆகாரம் வளங்கும் நிகழ்வு ஆரம்பிப்பு.

ராணமடுபாலர் பாடசாலைமாணவர்களுக்குஆரோக்கியமானஆகாரம் வளங்கும் நிகழ்வுஆரம்பிப்பு.
ராணமடுபாலர் பாடசாலைமாணவர்களுக்குஆரோக்கியமானஆகாரம் வளங்கும் நிகழ்வுராணமடுபாலர் பாடசாலையின் ஆசிரியர் தலைமையில் 09 யூண் அன்றுநடந்தேறியது. இதில் பொருளாதாரவிவகாரங்கள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன்,முன்பள்ளிதொடர்பானபோரதீவுப்பற்றுபி.தே.செயலகத்தின் அபிவிருத்திஉத்தியோகத்தர் கமல்ராஜ், இக்கிராமத்தின் கி.சேவகர் மற்றும் ஆசிரியரும் சமுகஆர்வலருமாகியமா.ஐPவரெட்டினம் விளையாட்டுக் களகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் எனபலர் கலந்துசிறப்பித்துவைத்தனர்.



இந்த நலத்திட்டத்தின் நான்காவது பாடசாலை இதுவாகும்,பின்தங்கிய கிராமப்புறமாணவர்களின் போஷாக்கு மட்டத்தினை அதிகரித்து அதனூடாககற்பதற்கு விருப்பத்தினையும் அதற்கானஆரோக்கியத்தினையும் ஏற்படுத்தும் வகையில் நிக் அன்ட் நெல்லிஅமைப்பினரின் நிதி அனுசரணையில் கிழக்கிலங்கை இந்துசமயசமுகஅபிவிருத்திச் சபையினரின் திட்டத்தில் ஒன்றாக பிரதேசசெயலகப் பிரிவினருடன் இணைந்து செயற்படுத்தும் ஒரு வெற்றிகரமான திட்டம்  இதுவாகும்.
'இந்ததிட்டத்தில் மாணவர்கள்  மாத்திரமல்லாமல் பெற்றோர்களுக்கு விழிப்புணர் வினையும், பெரியோர்களுக்கு பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும் ஒருஒருங்கிணைந்தசெயற்பாடாகவே இது கொண்டுநடாத்தப்படுகின்றது. எமதுபிரதேசங்களில் சிறுவர்களுக்கான கல்விஅவ்வளவாககணக்கிலெடுக்கப்படுவதில்லை,ஆனால் அவர்களுக்கானகல்விமிகமிகஅத்தியாவசியமானதொன்று. அதனால்தான் 'இளமையில் கல்விசிலையில் எழுத்து'என்றும் 'ஐந்தில் வளையாததுஐம்பதில் வளையாதுஎன்றும்'சொல்லி இருக்கிறார்கள். வருங்காலத்தில் இந்தமாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் ஆற்றல் வளர்த்தெடுக்கப்படவேண்டும் எனவும்'சி.தணிகசீலன் குறிப்பிட்டதுடன்,சிறுவர்களுக்குவிருப்பமானகதையொன்றின் மூலம் நீதி,அறம் பற்றிகுழந்தைகளுக்குஎடுத்துரைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

'பிள்ளைகள் ஆரோக்கியமானஉணவுகளைமாத்திரம் உட்கொண்டால் அதுபோதுமானதல்ல,தவிரவும் நல்லசுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்கவேண்டும். அதற்குபெற்றோர்கள் தகுந்தசெல்வாக்கினைநல்கமுன்வரவேண்டும். பலகடினத்தின் மத்தியில் இந்ததிட்டத்தினைநாம் இவர்களுடன் ஒன்றிணைந்துசெயற்படுத்துகின்றோம்,அதைபயன்படுத்திபிள்ளைகளைகல்வியிலும் ஆரோக்கியத்திலும் முன்னெடுத்துச் செல்லுவதுஉங்கள் கையிலேயேஉள்ளது'எனகமல்ராஜ் தெரிவித்தார்.

இச்செயற்திட்டம் பெற்றோரிடம் மாத்திரமின்றி ஊர் மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. இத்திட்டம் இடைவிடாமல் நடைபெறுவதற்குபெற்றோர், ஊர் மக்கள் ஆதரவாக இருப்பதாகக் கூறி,ஒழுங்கானமுறையில் இதனைக் கொண்டுநடாத்துகின்றமைக்காகநெஞ்சார்ந்தநன்றியினையும் தெரிவித்து, இவ்வாறானதிட்டம் பின்தங்கியகிராமத்திற்குவரப்பிரசாதம் எனவிதந்துரைத்தமை இந்தஏற்பாட்டுக் குழுவினருக்கிடையேமகிழ்ச்சியைஏற்படுத்தியது.