காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு  காத்தான்குடி  சமூக மேம்பாட்டுக்கான மக்கள்  ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  வருடாந்த  இப்தார் நிகழ்வு காத்தான்குடி அன்வர்  மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


சமூகத்தில் தலைவர்களாக திகழ இருக்கின்ற இளைஞர்கள் நேர முகாமைத்துவத்துடன் சமூகத்தின் பயணிக்க வேண்டும் என்ற கருப்பொருளில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள்  ஒன்றியத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் ,அல்ஹாபி  அனிஸ் பலாகி மௌலவியின் மார்க்க உரையும் ,

இன்றைய இளைஞர்கள் ஒழுக்க விளும்பியங்களுடன் மார்க்க நெறிகளை கடைபிடித்து நல்ல சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனைகளுடன் இளைஞர்களுக்கான இன்றைய இப்தார் கருப்பொருளாக காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி பணிப்பாளர்  அசேக் எம் .எ .எம் .அக்ரம் மௌலவியின் மார்க்க உரையும் ரமழான் நோம்பு  இப்தார் நிகழ்வு நடைபெற்றது .

இந்நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ,ஜாபிர் , பதுளை பிபிள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எ டப்ளியு .இ .வெலகெதர  காத்தான்குடி முஸ்லிம் சம்மேளனங்களின் உலமாக்கள்  உட்பட காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள்  ஒன்றியத்தின் உறுப்பினர்கள், இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள்  என பலர் கலந்துகொண்டனர்









.