அறநெறி கல்வி விழிப்புணர்வு மாதம் மற்றும் அறநெறி கல்வி கொடி தின நிகழ்வு

  (லியோன்)

இந்து பண்பாட்டு நிதியம், இந்து சபைய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும்  இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்து சமய அறநெறிக்  கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக  மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது


இளம் இந்து சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீக தன்மையை மலர செய்து அவர்களின் ஆளுமையும் ,திறமைகளும் மலர்ந்து விரிவடைய பயிற்சியளித்து ,வாழிகாட்டி ஒழுக்க நெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்குதனே அறநெறி கல்வியின் இலட்சியமாகும்.

இதனை மக்கள் மத்தியிலும்  குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அறநெறி பாடசாலைக்கு பிள்ளைகள் செல்வதனை ஊக்கப்படுத்தல் வேண்டிய அவசியத்தை  தெளிவு படுத்தம் முகமாக  மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை தேசிய இந்து சமய அறநெறி கல்வி விழிப்புணர்வு மாதமாக  இந்து  சமைய  கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும்  இந்துமத அலுவல்கள் அமைச்சினால் அனுஷ்டிக்கப்படுகின்றது

இந்நிகழ்வினை  மட்டக்களப்பு மாவட்டத்தில் அனுஷ்டிக்கும் வகையில் மாவட்ட செயலக கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் தேசிய இந்து சமய அறநெறி கல்வி விழிப்புணர்வு நிகழ்வும் , இந்து சமய அறநெறி கல்வி கொடி தின நிகழ்வும் இன்று பிற்பகல் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் ஆராம்பித்து வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில்  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த் , மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .நெடுஞ்செழியன் ,மாவட்ட செயலக  கலாசார உத்தியோகத்தர் குலநாயகம் , மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் .திருமதி .ஹரிதாஸ் மற்றும் மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்