சர்வதேச கூட்டுறவு தின முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான. கலந்துரையாடல்


 (லியோன்)

சர்வதேச கூட்டுறவு தின தேசிய நிகழ்வு முன் ஆயத்தம் தொடர்பான. கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தலைமையில்  மட்டக்களப்பில் நடைபெற்றது


கொழும்ப கூட்டுறவு திணைக்களம் ,தேசிய கூட்டறவு சபை மற்றும் ஏனைய மாகாணங்களுடன் இனைந்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு  மாவட்டத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள சர்வதேச கூட்டுறவு தின தேசிய நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாக மாகாண அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல்   மட்டக்களப்பில் நடைபெற்றது

கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தலைமையில் மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல்  நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் , கூட்டறவு திணைக்கள ஆணையாளர் , கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் , மாகாண கல்விப் பணிப்பாளர் , பொலிஸ் திணைக்கள பொலிஸ் அதிகாரிகள் , கல்விப் பணிப்பாளர்கள் , பிரதேச செயலாளர் , மாநகர ஆணையாளர் , உள்ளூராட்சி மன்ற சபைகளின் ,தவிசாளர்கள் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்