மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாயிலை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது


(லியோன்)


 விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைய மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை  தோண்டும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டது


மட்டக்களப்பு மாவட்டத்தின் பன்குடாவெளி , செங்கலடி நேரக்குடா , செங்கலடி நைனாவளி , வெள்ளக்காடு , கரவெட்டி கண்டம் ,இலுப்படிச்சேனை ,கன்னித்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆற்றை அண்டிய விவசாயிகளின் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .

இதன் காரணமாக  தமது அறுவடை பயிர்களை அறுவடை செய்வதற்கு முடியாத நிலையில் ஆற்று நீர் வழிந்தோடுகின்ற காரணத்தினால்  மிக சிரமத்தின் மத்தியில் அறுவடை பயிர்களை அறுவடை செய்வதாக தெரிவிக்கும் விவசாயிகள்  இது தொடர்பாக  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர் ஆகியோருக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை வெட்டுவதற்கான நடவடிக்கையினை இன்று முன்னெடுக்கப்பட்டது .

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் பெக்கோ இயந்திரம் கொண்டு  தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது 

இதனை  பார்வைவையிடுவதற்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  திருமதி .சுதர்சனி சிறிகாந்த் , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஞா .,ஸ்ரீநேசன் , தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர்  செய்யித் அலி ஸாஹிர் மௌலானா , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  கே .குணநாதன் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  மாகாணப்பணிப்பாளர்  வை . தர்மரட்ணம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட  பிரதம பொறியிலாளர்  டி . பத்மராஜா , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்  மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் , மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் ,விவசாயிகள் ஆகியோர்  பார்வையிட்டனர்