கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் கவனயீர்ப்பு ஆர்பாட்டம்


(லியோன்)

 கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம்  மற்றும் மட்டக்களப்பு இந்துக் குருமார் பேரவை இணைந்து இன்று  மட்டக்களப்பில்  கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
.

இந்து காலாசார பிரதியமைச்சு பதவியை முஸ்லிம்  இனத்தவருக்கு வழங்கியதை கண்டித்தும், இதனை உடனடியாக இந்த  அமைச்சு பதவியை இரத்து செய்து ஒரு இந்துவானவருக்கு வழங்க வேண்டும் என கோரி    மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா  முன்றலில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது .

கடந்த வாரம் இந்து கலாசார பிரதி அமைச்சராக இஸ்லாமிய ஒருவரை நியமித்து ஒட்டுமொத்த இந்து மத்ததையும் ,தமிழர்களையும் அவமானப்படுத்தியுள்ளார்கள்.

இந்த நாட்டில் சமாதானமும் ,நல்லாட்சியும் இடம்பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் இந்து மக்கள்  வாக்களித்து இந்த அரசை அரியாசனத்தில் அமரச்செய்தார்கள்

இந்தநிலையில் இந்து காலாசார பிரதியமைச்சு பதவியை முஸ்லிம்  இனத்தவருக்கு வழங்கி எம்மையும் எமது மதத்தையும் அவமானப்படுத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்   

இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாட்டில் தான் தமிழ் மக்கள் ,இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது .

அதிலிருந்து இன்னும் முழுமையாக மீட்சி பெறாத நிலையில் இனப்போராட்டாத்தோடு ,மதப்போராட்டத்தையும் கொண்டுவந்து எமது மக்கள் நிம்மதியாகவும் சமாதானமாகவும் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்

இது எமது இந்து மதத்தையும் தமிழர்களையும் பழிவாங்கும் நிகழ்வாகவே கருதுகின்றோம் .

எனவே உடனடியாக இந்த  அமைச்சு பதவியை இரத்து செய்து ஒரு இந்துவானவருக்கு வழங்க வேண்டும் என கோரி கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம்  மற்றும் மட்டக்களப்பு இந்துக் குருமார் பேரவை இணைந்து இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தினை முன்னெடுத்தனர் .

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்று  குறித்த விடயம் தொடர்பான  மகஜர் ஒன்றை மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது .