திராய்மடு வீரபத்தினி அம்பாள் ஆலய உற்சவத்தின் தீமிதிப்பு 22.ஆம் திகதி நடைபெறும்


 (லியோன்)

மட்டக்களப்பு திராய்மடு அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்பாள்  ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ விழா திருக்கதவு திறத்தல்  சடங்குடன் ஆரம்பமானது
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பழமை  மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு திராய்மடு அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்பாள்  ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ விழா  நேற்று மாலை   நடைபெற்ற  திருக்கதவு  திறத்தல்  உற்சவத்துடன்   ஆரம்பமாகி எதிர்வரும்  22.  ஆம் திகதி   வெள்ளிக்கிழமை  அதிகாலை நடைபெறவுள்ள தீ மிதிப்பு சடங்குடன்  ஆலய வருடாந்த உற்சவம்  நிறைவுபெறவுள்ளது

ஆலய உற்சவ காலங்களில் தினமும் காலை ,நண்பகல் விசேட பூசைகளும் மாலை அபிஷேக அலங்கார பூசைகள்  ஆலய பிரதம பூசகர் சிதம்பரப்பிள்ளை சத்தியசீலன்  தலைமையில்  நடைபெற்று உற்சவத்தின் 4ஆம் நாள் சடங்கு  20. ஆம் திகதி    புதன்கிழமை கும்பச்சடங்கு பூசைகள்   நடைபெறும் 

எதிர்வரும்  22.  ஆம் திகதி வெள்ளிக்கிழமை   அதிகாலை இடம்பெறவுள்ள தீ மிதிப்பு சடங்குடன் மட்டக்களப்பு    திராய்மடு அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்பாள்  ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ விழா  நிறைவுள்ளது .