களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய சத்திர சிகிச்சை நிபுனர்.


களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய சத்திர சிகிச்சை நிபுனராக சின்னத்துரை சிவகரன் அவர்கள்  நியமிக்கப்பட்டு இன்று 08.10.2026 தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு  புனித மிக்கேல் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான துறையில் கற்று  மருத்துவ துறைக்கு தெரிவாகி  கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தனது மருத்து பட்டத்தினை  பெற்று மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிறுநீரக சத்திசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி பின்ன சத்திர சிகிச்சை நிபுணராக நியமனம் பெற்று மகாஓயா, போன்ற  ஆதார வைத்தியசாலைகளில்  சத்திர சிகிச்சை நிபுணராக சேவை புரிந்த இவர் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்க பட்ட நிலையில்    தனது  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இக்கடமையேற்பு நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் நலன்புரித் சங்கத்தினர் அவரை நேரில் சென்று வாழ்த்தி வரவேற்று தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தனர்