மங்கிக்கட்டு பிள்ளையாரடி ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பெருவிழா-2018




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மங்கிக்கட்டு பிள்ளையாரடி ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பெருவிழா - 2018

01ம் நாள் சடங்கு
22.06.2018 (வெள்ளிக்கிழமை)
மங்கிக்கட்டு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பட்டெடுப்பும், அம்மன் எழந்தருளிப்பும் இடம்பெறும்.

02ம் நாள் சடங்கு
22.06.2018 (சனிக்கிழமை)
இரவினை சிறப்பிக்கும் வண்ணம்  மங்கிகட்டு கதிர் கலைக் கழகத்தினால் இராமாயணத்தில் ஒரு பகுதியான "ராமன் வனவாசம் போகுதல்" எனும் கரகமும்,
மகாபாரதத்தின் ஒரு பகுதியான "சராசந்தன் போர்" வடமோடி நாட்டுக் கூத்தும் இடம்பெறும்.

03ம் நாள் பள்ளையச் சடங்கு
24.06.2018 (ஞாயிற்றுக்கிழமை)
இரவு மங்கிக்கட்டு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து அலங்கார பூம்பந்தல் பவனி வரும் நிகழ்வுடன் ஈச்சந்தீவு லயன் ஸ்டார் கழகத்தின் நடனம் இடம்பெறும்.
தொடர்ந்து மேடைக் கலை நிகழ்வுகள் இடம்பெறும்.

உற்சவ காலத்தில் பகல் பூசை நண்பகல் 12.00 மணிக்கும்,
இரவுப் பூசை 01.00 மணிக்கும் இடம்பெறும்.