13 வயதுகுற்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடைப்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக 13 வயதுகுற்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்  மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்காப்பு YMCA அனுசரணையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி உள்ளக அரங்கில் நடைபெற்றது


தேசிய சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்  சரவணமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய  YMCA  சம்மேளன முன்னாள் தலைவர் பெல்சியன் பிரான்சிஸ் ,மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்க தலைவர் வி .பிரதீபன் ,மாவட்ட  கூடைப்பந்தாட்ட சங்க செயலாளர் பி .கிருபைராஜா , உடல்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ,வி .லவக்குமார், புனித மிக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா , மட்டகக்களப்பு வை எம் சி எ  நிறுவன பொது செயலாளர் ஜெகன் ஜீவராஜ் , உடல் கல்வி ஆசிரியர் ஆலோசகர்  ரவி  மற்றும் மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்