வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா இன்று வெள்ளிக்கிழமை (04.05.2018) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி சரணியா சுபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்விற்கு கௌரவ அதிதியாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளாலருமான எம் .உதயகுமார், சிறப்பு அதிதிகளாக வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், உதவி கல்விப் பணிப்பாளர் வலயக் கல்வி அலுவலகம் கல்குடா திருமதி ரவிராஜ் பாடசாலையின் முன்னால் அதிபர்கள். பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் பழைய மாணவ சங்கத்தினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த பரிசளிப்பில் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களும் பாடசாலையின் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்ளும் பாடரீதியாக கற்றலில் முதன்மை பெற்ற மாணவர்களும் கௌரவிக்கபட்டு சான்றிதழ்கள் பரிசில்கள் கேடயங்கள் பதக்கங்கள் வழங்கபட்டன.

அத்துடன் இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றதுடன் அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.