தாண்டவன்வெளி பங்கு அருட்சகோதரியையும் , மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்கில் அருட்சகோதரியாக பணியாற்றி  கிளிநொச்சி மாவட்டம்  வலைப்பாடு பூநகரி ரோமன் கத்தோலிக்க பாடசாலை  இடம்மாற்றம் பெற்று செல்லும் அருட்சகோதரி அனிற்றாவை  பாராட்டி கௌரவிக்கும்  நிகழ்வு
  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


1989 ஆம் ஆண்டு  துறவர வாழ்வில் இணைந்து பெரும் பணியாற்றிய அருட்சகோதரி அனிற்றா 1992  ஆம் ஆண்டு நெடுந்தீவில் ஆசிரியராக அமர்த்தப்பட்டு  யாழ் குருநகரில் முதல் ஆசானாக பணியாற்றி மட்டக்களப்பு இடம்மாற்றம் செய்யப்பட்டார் .

மட்டக்களப்பு  இடம்மாற்றம் செய்யப்பட்டு மட்டக்களப்பு கருவபன்கேணி விபுலானந்தா கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியதுடன் ,தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்கில் அருட்சகோதரியாக பணியாற்றி வந்துள்ளார்

மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்கில் அருட்சகோதரியாக பணியாற்றி  தற்போது இடமாற்றம் பெற்று கிளிநொச்சி மாவட்டம்  வலைப்பாடு பூநகரி ரோமன் கத்தோலிக்க பாடசாலை  ஆசிரியராக  செல்லும் அருட்சகோதரியை பங்கு மக்களால்  கௌரவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும்   நிகழ்வு பங்கு தந்தை ரமேஷ் கிறிஸ்டி தலைமையில் இன்று ஆலயத்தில் நடைபெற்றது

இதேவேளை  மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் நடத்தப்பட்ட விவிலிய வினாவிடை போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட .விவிலிய வினாவிடை போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவர்களையும் அவர்களுக்கு  கற்பித்த  ஆசிரியர்களையும்  கௌரவித்து பாராட்டி பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது

இந்நிகழ்வில்   பங்கு மக்கள் ,மறை ஆசிரியர்கள்  மாணவர்கள் கலந்துகொண்டனர்