மண்முனைப்பற்றில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் அனர்த்த குறைப்பு செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி, மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கே.ரமேஸ் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது நீர்த்தேங்கும் இடங்கள் மற்றும் நுளம்பு பெருகும் இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் வீடுகளும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது.