சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விவாத போட்டி


(லியோன்)

இலங்கை கரித்தாஸ்- செடெக் நிறுவனத்தின் 50 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில்  பாடசாலை மாணவர்களுக்கிடையில்  சமாதானத்தையும்  மற்றும் நல்லிணக்கத்தையும்  ஊக்குவிக்கும் நோக்குடன்  இந்த  விவாத போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன .


12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக  மறை மாவட்டங்களிலுள்ள சமூகப் பணி நிறுவனங்களின் ஒழுங்கமைப்பில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இந்த விவாத போட்டிகள் நடைபெற்று வருகின்றன ,

இதன் கீழ் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில்  மட்டக்களப்பு ,அம்பாறை  மாவட்டத்திற்குட்பட்ட கல்வி வலயங்களான  ,மட்டக்களப்பு , ஏறாவூர் மத்தி , பட்டிருப்பு , மட்டக்களப்பு மேற்கு , கல்குடா , கல்முனை , ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விவாத போட்டிகள் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை எலக்ஸ் ரொபட் தலைமையில் நடைபெற்றது .

இன்று நடத்தப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விவாத போட்டிகளில் முதலாம் ,இரண்டாம் இடங்களை பெறுகின்ற பாடசாலைகள்  ஜுலை மாதம் கொழும்பில் தேசிய ரீதியில் நடைபெறுகின்ற விவாத போட்டிகளில் பங்கு கொள்ளவுள்ளன ,
இன்று நடத்தப்பட்ட விவாத போட்டி நிகழ்வுக்கு நடுவர்களாக  சட்டத்தரணிகள் , மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகள் , அரச திணைக்கள அதிகாரிகள் , அருட்தந்தையர்கள் ,பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்