கல்லடி வேலூர் இளைஞர் அணி ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.


(லியோன்)

கல்லடி உளநலவியல் கல்வி நிலையத்தின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் நிலவுகின்ற இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் கல்லடி வேலூர் விபுலானந்தா இளைஞர் அணி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு  மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று கல்லடி உளநலவியல் கல்வி நிலையத்தில்  நடைபெற்றது


மட்டக்களப்பு கல்லடி வேலூர் விபுலானந்தா இளைஞர் அணி விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ் .சுபராஜ் வழிகாட்டலில் மட்டக்களப்பு இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட  இந்த இரத்ததான முகாம் நிகழ்வில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர்  வைத்தியர் கே .விவேக் , வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவர் எம் .பத்மநாதன் , சிறிலங்கா  சுதந்திர கட்சியின் மாவட்ட பிரதம இணைப்பாளர்  கே .ஹரிஹரன் ( கிரி)  சிறிலங்கா .சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் , வேலூர் கிராம சேவை உத்தியோகத்தர் பாக்கியநேசன் , நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் . அல் அமான் மற்றும்  வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , கல்லடி வேலூர் விபுலானந்தா இளைஞர் அணி விளையாட்டு கழக  இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டார் .

கல்லடி உளநலவியல் கல்வி நிலையத்தினால் முன்னெடுத்து வரும் வாழ்வாதரா உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் உளநலவியல்  கல்வி நிலைய இயக்குனரின் வேண்டுகோளுக்கு இணங்க சிறிலங்கா  சுதந்திர கட்சியின் மாவட்ட பிரதம இணைப்பாளர்  கே .ஹரிஹரன் நிதி உதவியின் கீழ் வறுமை கோட்டின் கீழ் சுயதொழில் செய்யும் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்நிகழ்வில் துவிச்சக்கர வண்டி  வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .