மட்டக்களப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வு

சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று என்னும் தலைப்பில் இந்த மேதின நிகழ்வு மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் கால்நடை பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம்,மாதர் அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது விவசாயிகள்,மீனவாகள், கால்நடை பண்ணையாளர்கள், ஆசிரியர்கள், உள்ளுராட்சிசபை தொழிலாளர்கள்,வேலையற்ற பட்டதாரிகள்,தொண்டராசிரியர்கள்,பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேதி நிகழ்வில் அல்ல பாராளுமன்ற அமர்வின்போது தெளிவான விடயங்களை ஜனாதிபதி கூறவேண்டும் என லங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அரைகுறையாக நின்றுபோயுள்ள அரசியலமைப்பின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையப்போகின்றுது என்ற செய்தியை தமிழ் மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த செய்தியின் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வும்முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.