மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வதேச நடன விழா(லியோன்)

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவகத்தின் ஏற்பாட்டில் நடன  ஆசிரிய ஆலோசகர் கலாவித்தகர் மலர்விழி சிவஞான சோதி ஒழுங்கமைப்பில் வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில் , சர்வதேச நடன விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது
.
மட்டக்களப்பு வரலாற்றில் மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 24 பாடசாலைகளின் 1000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில்  மைதானத்தில் நடனமாடிய  நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் பிறந்த தின நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் நடத்தப்பட்ட சர்வதேச நடன தின மாபெரும் நடன நிகழ்வில் பிரதம அதிதியாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , சிறப்பு அதிதிகளாக  பரீட்சைகள் திணைக்கள பிரதி பரீட்சை ஆணையாளர் திருமதி . ஜீவராணி புனிதா , மாநகர ஆணையாளர் என் . மணிவண்ணன் ,பிரதேச செயலாளர் கே .குணநாதன்  ஆகியோர் கலந்துகொண்டனர் .