மட்டு-மாநகர சபையினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை


(லியோன்)

 தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக  நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு  நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த செயல் திட்ட  நடவடிக்கையாக  மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் ..

இதற்கு அமைய  மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு  இணைந்து மாநகர எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை   முன்னெடுத்து வருகின்றனர்   

இந்த நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு சின்ன உப்போடை  பகுதியில் உள்ள வெற்று காணிகள் ,வீடுகள் ,வீதிகள் போன்ற  பகுதிகளை  துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன .

இன்று மேற்கொள்ளப்பட்ட  துப்பரவு செய்யும்  நடவடிக்கையின் போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக  அடையாளம் காணப்பட்ட  காணி உரிமையாளர்களுக்கும் அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன் ,எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும்  மட்டக்களப்பு  சுகாதார வைத்திய அதிகாரி  தெரிவித்தார்

இந்த விசேட டெங்கு ஒழிப்பு சிரமதான பணியில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் ,பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே ,கிரிசுதன் , மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் , பொதுசுகாதார பரிசோதகர்கள் , கலந்துகொண்டனர்