“ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்” உடல் நல மேம்பாட்டு அப்பியாச நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தேசிய உடல் ஆரோக்கிய  வாரத்தை முன்னிட்டு   “ஆரோக்கியத்தின் ஊடாக உலகை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில்  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உடல் நல மேம்பாட்டு தேசிய வார அப்பியாச நிகழ்வு இன்று நடைபெற்றது 


மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  கே .குணநாதன்      வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா தலைமையில் நடைபெற்ற உடல்  நல மேம்பாட்டு தேசிய வார அப்பியாச செயல்பாட்டு நிகழ்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் , டி .பிரசாத்    பயிற்றுவிப்பாளராக கலந்துகொண்டனர் .

இந்த உடல் ஆரோக்கிய செயல்பாடு  நிகழ்வானது அரச அலுவலக உத்தியோகத்தர்கள் வேலைப்பளு மத்தியிலும் ,உல அழுத்தம் காரணமாக பல்வேறு வகையான தொற்றாநோய்களுக்கு உள்ளாகின்றார்கள் ,அந்த அடிப்படையிலே சிறந்த உடல் ஆரோக்கியமான  சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய உடல் ஆரோக்கிய வாரமாக பிரகடன படுத்தப்பட்டு அனைத்து அரச அலுவலங்களில் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது  .