மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழில் சந்தை மற்றும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கும்  மற்றும் நேர்முக தகமை சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளும் நிகழ்வும் மட்டக்களப்பில் நடைபெற்றது 


மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட பிரதேச செயலகங்களின்  அனுசரணையுடன்  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தொழில் சந்தை மற்றும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்  பாடசாலை இடைவிலகியவர்கள்  ,பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தவர்கள் , வேலைவாய்ப்பற்ற இளைஞர் ,யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கும்  மற்றும் நேர்முக தகமை  சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளும் நிகழ்வும்  இன்று மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்க மண்டபத்தில் நடைபெற்றது .

இந்த  தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள் மற்றும் நேர்முக தகமை சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் ஊடாக எதிர் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் ,யுவதிகளுக்கு தனியார் நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்கள் ,வெளிநாட்டு வேலையாப்புக்கள் ,உயர்கல்வி வாய்ப்புக்கள் , புலமைப்பரிசில்கள் மூலமான உயர்கல்வி வசதிகள் ,தொழில்திறன் அபிவிருத்தி உதவிகள் , சுயதொழில் வாய்ப்புக்களுக்கான ஆலோசனைகள் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கு மற்றும் நேர்முக தகமை சான்றிதழ்கள்  பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் ,தனியார்  நிறுவனங்களில் பிரதிநிதிகள் , இளைஞர் ,யுவதிகள் என பலர் கலந்துகொண்டனர்