ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் பூர்த்தியினை சிறப்பிக்கும் விசேட திருப்பலி


 (லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகை ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு 10  ஆண்டுகள் பூர்த்தியினை சிறப்பிக்கும்  விசேட திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று ஒப்புகொடுக்கப்பட்டது .


மறை மாவட்ட ஆயராக  திருநிலைப்படுத்தப்பட்டு 10 வது  ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும்  விசேட திருப்பலி மட்டக்களப்பு  புளியடிக்குடா புனித  செபஸ்தியார்  ஆலய த்தில் அருட்தந்தை நவரெட்ணம் (நவாஜி) அடிகளாரினால் இன்று  ஒப்புகொடுக்கப்பட்டது.

ஆயருக்கு ஆசி வேண்டி ஒப்புகொடுக்கப்பட்ட திருப்பலியில்  பாடசாலை மாணவர்கள் ,பங்கு மக்கள் , பொது நிலையினர் என பலர்  கலந்துகொண்டனர் .

இதேவேளை மறை மாவட்ட ஆயராக  11 வது ஆண்டில் காலடி வைக்கு ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் ஆண்டகைக்கு  விசேட வாழ்த்து செய்திகளை   மட்டக்களப்பு மறை மாவட்ட  உள்ள அனைத்து அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பொது நிலையினர் தெரிவித்துக்கொண்டனர்