மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக விளையாட்டு போட்டி தேற்றாத்தீவில் !


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து நாடத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கிடையிலான விளையாட்டு விழாவானது தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டு கழகத்தின் பொது விளையாடடு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இவ் விளையாட்டு விழாவிற்று மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் முதன்மை அதிதியாகவும்  மட்டு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். மேலும் பல திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்

இவ் விளையாட்டு விழாவின்போது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கிடையிலான கயிறு இழுத்தல்,கிடு இளைத்தல்,கிளித்தட்டு பெயர் இல்லாத விளையாட்டு போன்ற பல விளையாட்டுகள் நடைபெற்றன.