பாலமீன்மடு – திராய்மடு மீனவர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு


 (லியோன்)

மட்டக்களப்பு பாலமீன்மடு – திராய்மடு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் ஜி .சுரேஷ் தலைமையில் மீனவர்களுக்கான தோணிகள் ,மீன்பிடிக்கான வலைகள் மற்றும் வாழ்வாதார  நிதி உதவிகளும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பாலமீன் மடு மீனவர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது .



மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்  நாடவடிக்கையின் கீழ்  கிழக்குமாகாண மீன்பிடி திணைக்களத்தினால் மீனவர் சங்கங்களுக்கு வருடாந்தம் மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மாகாண மீன்பிடி திணைக்களத்தினால் மட்டக்களப்பு பாலமீன்மடு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்ட தோணிகள் மற்றும் வலைகள் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட மீனவர்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது .

இதேவேளை மீனவர் சங்கத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மீனவ குடும்பங்களில் பெண்கள் தலைமைதாங்கும் குடும்ப பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன .

இந்நிகழ்வில் மாவட்ட நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர் கே . கேதாகரன் , மாவட்ட மீன்பிடி கூட்டுறவு அபிவிருத்தி எச் எம் கே ரகுமான், நீரியல்வள அபிவிருத்தி ,மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர்  தீ .தீபிகா , கிராம சேவை உத்தியோகத்தர்  கோ .கோகுலதாஸ் ,மற்றும் மீனவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்