"விளாவூர் யுத்தம் " மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு(S.t)

மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 48 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு "விளாவூர் யுத்தம் 2018" எனும் தொனிப்பொருளில் நடாத்திக் கொன்டிருக்கும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (05/05/2018)நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,
மட்/நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை,
விளாவட்டவான் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் வே.கமலநாகன்,
ஆகிய அதிதிகள் வருகை தந்தனர்.

இன்றய தினம் பதினொரு போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றது.
நாளை மற்றும் நாளை மறுதினமும் போட்டி நடைபெற இருக்கின்றது.