தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகதத்தின் விளம்பி புது வருட விளையாட்டு விழா


தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகதத்தின் புது வருட விளையாட்டு விழாவானது இன்று(6.05.2018) தேற்றாத்தீவு கடற்கரை பொது விளையாட்டு மைதானத்தில் கழக்தின் தலைவர் சி.லம்போதரன் தலைமையில் இடம் பெற்றது.அந்த வகையில் இவ் விளையாட்டு விழாவிற்கு .சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் பு.யோகநாதன், சிறப்பு அதிதியாகவும் ம.நடநாஜா முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், த.தவராணி பிரதேச சபை உறுப்பினர், ரி.தேவரஞ்சன் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் இ.சாணக்கியக் இராசமாணிக்கம் மக்கள் அமைப்புத் தலைவர் ஆகியோர் அழைப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்

இவ் விளையாட்டு விழாவின் 15 வயதுக்கு மேல்பட்ட கீழ்பட்ட மரதன் ஒட்டமானது இன்று காலை இடம் பெற்றது 15 மேல்பட்ட வருக்கன ஒட்டதினை முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் ஆரம்பித்து வைத்தார்.  பின்நேர நிகழ்வில் தரம் -5 .பொ../ மற்றும் / ஆகிய பரீட்சையில் சிறந்த சாதனையை நிலை நாட்டியவர்களுக்கும் பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கொளரவிக்கப்பட்டதுடன்  தேற்றாத்தீவின் மூத்த கலைஞர் த.விஸ்வலிங்கத்தின் கலைசேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பல சுவார்ஸ்யமான போட்டி நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதுடன் பரிசில்களும் வழங்ப்பட்டது