சிறிசபாரத்தினம் உட்பட முன்னாள் போராளிகளின் 32வது ஆண்டு நினைவு தினம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட முன்னாள் போராளிகளின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாண தலைமையகத்தில் இந்த நிகழ்வு உணர்வுபூவமாக நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபையின் உறுப்பினருமான எஸ்.சற்குணம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார்,மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை,பிரதேசசபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.